கறவை மாடுகளுக்கு கருவூட்டலுக்கான பராமரிப்பு !!
கறவை மாடுகளுக்கு கருவூட்டலுக்கான பராமரிப்பு !!
Fertilization care for dairy cows !!
கருவூட்டலுக்கு
முன் மாடுகள் பராமரிப்பு.
கறவை மாடுகளுக்கு கருவூட்டலுக்கான பராமரிப்பு !!
கருவூட்டலுக்கு முன் மாடுகள் பராமரிப்பு.
★ கறவை மாடுகளைக் கருவூட்டலுக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக மாடுகளை அடித்தோ, உதைத்தோ, துன்புறுத்தியோ அல்லது அதிக பயத்திற்கு உட்படுத்தியோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
★ இவ்வாறு கொண்டு செல்லப்படும் கறவை மாடுகளில் அட்ரீனலின் எனப்படும் கனநீர் (ர்ழசஅழநெ) சுரந்து கருப்பையின் இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்துவிடும். இதன் காரணமாக பிட்யூட்டரி எனப்படும் நாளமில்லாச் சுரப்பியின் கனநீரான ஆக்சிடோசின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையை அடைவது தடைபட்டுவிடும்.
★இதன் மூலமாக கறவை மாடுகளின் கருப்பை சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைந்து விந்தணுக்கள் கரு முட்டையோடு இணைவது தடைபடும். மேலும், கருவூட்டல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளுக்கு உடனடியாக கருவூட்டல் செய்யாமல் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கட்டி வைத்து பிறகு கருவூட்டல் செய்வதன் மூலம் மேற்கூறிய பாதிப்பில் இருந்து மாடுகளைப் பாதுகாக்கலாம்.
★ மாடுகளைக் கருவூட்டல் செய்வதற்கு முன்பாக மாடுகளின் பிறப்பு உறுப்பினைச் சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில், பிறப்பு உறுப்பில் சாணம், சிறுநீர் போன்றவை ஒட்டி இருப்பதோடு நுண் கிருமிகளும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
★ இவைகள் கருவூட்டல் உபகரணத்தின் வாயிலாக கருப்பையினுள் செல்வதால் கருப்பை அழற்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
கருவூட்டலுக்கு பிறகு மாடுகள்
பராமரிப்பு :
★ கறவை மாடுகளைக் கருவு+ட்டல் செய்த பிறகு மாடுகளை உடனடியாக ஓட்டிச் செல்லாமல் ஒரு பத்து நிமிடம் மரத்தடி நிழலில் கட்டி வைத்த பிறகு ஓட்டிச் செல்லலாம். மேலும் கறவை மாடுகளை உடனடியாக ஓட்டிச் செல்வதால் முன்பே சொல்வது போல ஆக்சிடோசின் என்ற கனநீர் தடைபட வாய்ப்பு உள்ளது.
★ கறவை மாடுகளின் தலையை உயரமாக உயர்த்தி மரக்கிளை போன்றவற்றில் கட்டி மாட்டை படுக்கவிடாமல் செய்வதோடு தண்ணீர், தீவனம் போன்றவற்றையும் தராமல் பட்டினிபோட்டு விடுவர்.
★ இப்படிச் செய்வதன் மூலமாக செலுத்தப்பட்ட விந்தணுக்கள் திரவ ஒழுக்கின் மூலம் வெளியே வரவிடாமல் தடுத்து விடலாம் என்பது தவறானது ஆகும்.
★ மேலும் கறவை மாடுகளுக்கு விந்தணுக்கள் கருப்பையின் நடுப்பகுதியில் செலுத்தப்படுவதால், பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவ ஒழுக்கு மூலமாக விந்தணுக்கள் வெளிவர வாய்ப்பு இல்லை.
★ எனவே, கருவூட்டல் செய்த மாடுகளுக்கு போதுமான அளவு தீவனம், குடிநீர் போன்றவற்றை அளிப்பது அவசியம். வெயில் நேரங்களில் மாட்டின் மேல் குளிர்ந்த நீரைத் தௌpப்பதன் மூலம் சினைப் பிடிப்பு விகிதத்தை அதிகரிக்கலாம்.
★ மேலும் மாட்டிற்கு கருவு+ட்டல் செய்துவிட்டோம், சினைப் பிடித்துவிடும், மூன்று மாதங்கள் கழித்து சினைப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று இருந்துவிடாமல், கருவு+ட்டல் செய்தபின் 21 நாட்களுக்குள் ஏதாவது சினைத் தருண அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கவனித்து கருவூட்டல் செய்வது மிகவும் அவசியம்.
★ கறவை மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 3 மாதம் கழித்து சினை பிடித்துள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சினை ஊசியில் 40 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே சினை பிடிக்கும். மேலும் சினை ஊசி போட்டு 3 மாதத்திலேயே சினை பார்த்திருந்தால் 4 மாதம் வீணாவதைத் தவிர்த்திடலாம்.
Comments
Post a Comment